வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை


வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை
x
தினத்தந்தி 22 Feb 2021 1:28 AM IST (Updated: 22 Feb 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை

புதூர்
மதுரை திருவாதவூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு மதுரை மேலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது கொடிமங்களம் அருகே ஒரு பெண் வழி மறைப்பது போல் இருட்டில் தெரிந்தது. இவர் சுதாரித்து யாரென்று பார்க்கும் முன்பு அருகே வந்த திருநங்கை ஒருவர், குமரேசன் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story