மாவட்ட செய்திகள்

தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் கைது + "||" + The boy who stabbed the worker was arrested

தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் கைது
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவன் கைது
குளித்தலை
குளித்தலை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இடத்தகராறு காரணமாக 18 வயது சிறுவன், மாரிமுத்துவை காய்கறி வெட்டும் கத்தியால் அவரின் முதுகில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தான். இதில் படுகாயமடைந்த மாரிமுத்து குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர், கைதுசெய்யப்பட்ட சிறுவன், குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சியில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.