பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்கப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் தளவாய் மாடன் (வயது 29). விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஊர் அருகே தோட்டம் ஒன்று உள்ளது.
தென்னை மரத்தில் இருந்து கிணற்றில் விழுந்துள்ள தேங்காய்களை எடுப்பதற்காக கயிறு மூலம் தளவாய் மாடன் கிணற்றில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி அவர் கிணற்றில் விழுந்தார்.
இதுகுறித்து உறவினர்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி ரமேஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி தளவாய் மாடனை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story