கூடங்குளத்தில 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
கூடங்குளத்தில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் மேற்கு பகுதி கல்யாண மண்டபம் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நவீன் (வயது 19). இவருக்கும், அதே ஊரில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 18 வயதான வாலிபருக்கும் இடையே ஆன்லைன் விளையாட்டு விளையாடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நவீன் தன்னுடைய நண்பரான முருகேசன் மகன் சூரியபிரகாசுடன் (20) கூடங்குளம் கிழக்கு பகுதிக்கு சென்றார். அப்போது நவீன், சூரியபிரகாஷ் ஆகிய 2 பேரையும் சிலர் தாக்கி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story