மாவட்ட செய்திகள்

ஒருதலை காதலால் விபரீதம்:வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + In Somarasampettai, he committed suicide by hanging himself with his head in love.

ஒருதலை காதலால் விபரீதம்:வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஒருதலை காதலால் விபரீதம்:வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
சோமரசம்பேட்டையில் ஒருதலை காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோமரசம்பேட்டை, 

சோமரசம்பேட்டையில் ஒருதலை காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் வங்கி ஊழியர்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் நகரை சேர்ந்தவர் ரியாசுதீன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஷானவாஸ் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது தந்தையிடம் தகராறு செய்துவிட்டு தம்பி வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் குளித்தலையில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் ஷானவாசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

காதல் தோல்வி

ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷானவாஸ் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில், காதல் தோல்வியால் மனமுடைந்த ஷானவாஸ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ஷானவாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.