மாவட்ட செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில்ரூ.48¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை + "||" + Rs 48 lakh worth of smuggled gold seized

திருச்சி விமான நிலையத்தில்ரூ.48¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில்ரூ.48¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.48¾ லட்சம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கடத்தி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 
அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த முகம்மது கலித்கான்(வயது 30) என்பவர் தனது உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.48¾ லட்சம் மதிப்பிலான 1 கிலோ 28 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.