மாவட்ட செய்திகள்

பல்லடத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு + "||" + balladam plastic kupai

பல்லடத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு

பல்லடத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு
பல்லடத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு
பல்லடம்:-
பல்லடம்  நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவது நகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில் பல்லடத்தில் தினமும், 15 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன. அப்படி பிரிக்கப்பட்டு, தனியே சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை, நவீன எந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து பண்டல்களாக வைக்கப்பட்டு இருந்தன. அதன்படி  25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலுார் சிமெண்டு தயாரிப்பு ஆலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் கணேசன், சுகாதார ஆணையாளர் சிவக்குமார் பார்வையிட்டனர்.