ஈரோட்டில் கடந்த 7 மாதங்களில் விதிமுறைகளை மீறிய 80 ஆலைகளுக்கு ரூ.2¼ கோடி அபராதம்


ஈரோட்டில் கடந்த 7 மாதங்களில் விதிமுறைகளை மீறிய  80 ஆலைகளுக்கு ரூ.2¼ கோடி அபராதம்
x
தினத்தந்தி 22 Feb 2021 3:14 AM IST (Updated: 22 Feb 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கடந்த 7 மாதங்களில் விதிமுறைகளை மீறிய 80 ஆலைகளுக்கு ரூ.2¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் கடந்த 7 மாதங்களில் விதிமுறைகளை மீறிய 80 ஆலைகளுக்கு ரூ.2¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
30 ஆலைகளுக்கு சீல்
ஈரோடு வெண்டிபாளையம் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 30 சாய, சலவை ஆலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். 
இதற்கிடையில் ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக         பணியாற்றிய செந்தில்       விநாயகம் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் பெருந்துறை சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக கூடுதல் பொறுப்பேற்று கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் வெண்டிபாளையம் பகுதிகளில் செயல்படும் ஆலைகளில் ஆய்வு செய்து மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் கூறியதாவது:-
வெண்டிபாளையம் பகுதியில் நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய 30 சாய, சலவை ஆலைகள் கண்டறியப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது.
ரூ.2¼ கோடி அபராதம்
மேலும் இந்த 30 ஆலைகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வரை போடப்பட்டு இருந்த குழாய்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அகற்றப்பட்டன. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் விடும் ஆலைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் விதிமுறைகளை மீறி இயங்கிய 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு ரூ.2 கோடியே 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த விவரங்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கும் தாக்கல் செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story