தொடர் முகூர்த்தங்களால் பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு


தொடர் முகூர்த்தங்களால்  பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 21 Feb 2021 10:13 PM GMT (Updated: 21 Feb 2021 10:13 PM GMT)

தொடர் முகூர்த்தங்களால் பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். 

தற்போது பனிப்பொழிவு காரணமாக பல வாரங்களாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.800- க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், பெங்களூரு மல்லி ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் ஏலம் போனது. 

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பூக்கள் ஏல‌த்தில் குண்டுமல்லி கிலோ ரூ.1,500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.160-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், பெங்களூரு மல்லி ரூ.1,000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும் ஏலம் போனது. 

சுப முகூர்த்தங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story