கே.வி.குப்பம் அருகே மாடு விடும் விழாவில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கே.வி.குப்பம் அருகே நடந்த மாடு விடும் விழாவில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மாடுகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.
கே.வி.குப்பம்
மாடு விடும் விழா
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, சோழமூர் அடுத்த லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாடுவிடும் விழா நடைபெற்றது. செஞ்சி ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் விழாவை தொடங்கி வைத்தார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சித்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 காளைகள் கலந்துகொண்டன. மொத்தம் 40 பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
போலீஸ் தடியடி
பிள்ளையார் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தன. மாடுகள் ஓடும் பாதையில் நின்றிருந்த கூட்டத்தினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மாடுகள் ஓடும்போது குறுக்கே நின்ற வாலிபர்கள் மீது மாடுகள் முட்டியதாலும், பயந்து ஓடியபோது கீழே விழுந்ததிலும் 12 பேர் காயமடைந்தனர்.
போட்டியில் வெற்றிபெற்ற காலைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் முதல் பரிசாக ரூ.51 ஆயிரத்து 501, 2-வது பரிசாக ரூ.41 ஆயிரத்து 401, மூன்றாவது பரிசாக ரூ.31 ஆயிரத்து 301 வழங்கப்பட்டன.
கே.வி.குப்பம் தாசில்தார் ராஜேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் பலராமன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.பாலச்சந்திரன் ஆ௳ியோர ரிழாவை கண்காணித்தனர். லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், குப்பன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story