சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் அணிவகுப்பு

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் தூய்மை பணிக்கான ஒப்பந்தம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்,
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் தூய்மை பணிக்கான ஒப்பந்தம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குப்பை சேகரிப்பு மற்றும் உரம் தயாரிக்கும் பணிக்காக புதிதாக 800 பேட்டரி வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்.
இந்தநிலையில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள இந்த பேட்டரி வாகனங்களின் அணிவகுப்பு முன்னோட்டம் நேற்று காலை எணணூர் விரைவு சாலையில் இருந்து பாரதியார் நகர் எல்லையம்மன் கோவில் சந்திப்பு வரை நடைபெற்றது.
திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் தேவேந்திரன், செயற்பொறியாளர் பால்தங்கதுரை உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பேட்டரி வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
Related Tags :
Next Story