தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:03 PM IST (Updated: 22 Feb 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மரியம்மாள் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயலட்சுமி    முன்னிலை         வகித்தார். செயலாளர் சந்திரா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் அந்தோணியம்மாள், செயலாளர் ராமமூர்த்தி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூராஜன், செயலாளர் முருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியசீலி ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். சங்க இணை செயலாளர் சந்தணமாரி நன்றி கூறினார்.

Next Story