பயோ கியாஸ், பயோ பெட்ரோல் உற்பத்தி செய்யக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


பயோ கியாஸ், பயோ பெட்ரோல் உற்பத்தி செய்யக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 1:39 PM GMT (Updated: 22 Feb 2021 1:39 PM GMT)

சர்க்கரை ஆலைகளில் பயோ கியாஸ், பயோ பெட்ரோல் உற்பத்தி செய்யக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

சர்க்கரை ஆலைகளில் பயோ கியாஸ், பயோ பெட்ரோல் உற்பத்தி செய்யக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் சர்க்கரை ஆலை கழிவிலிருந்து எரிசாராயம் தயாரிப்பது போல் தத்ரூபமாக செய்து காண்பித்து அதனை கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ‘‘பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாறாக சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்றி எத்தனால் தயாரித்து வாகனங்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும். இதன் மூலம் கரும்பு விவசாயிகள், நுகர்வோர் லாபம் பெற முடியும். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வை கருத்தி கொண்டு அரசு பயோ கியாஸ், பயோ பெட்ரோல், பயோ டீசல் உற்பத்தி தொடங்கி நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் பங்கு பெறும் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் கோரிக்கை ஏற்று இதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும்’’ என்றனர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Next Story