பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிலிண்டருக்கு மாலை
ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் மூர்த்தி, ராஜ்குமார், வசந்தி, பொருளாளர் கண்ணையன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story