மாவட்ட செய்திகள்

நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + In Nagai, DMK activists protest

நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர். இதி்ல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
நாகப்பட்டினம்:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர். இதி்ல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.
தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகை அவுரித்திடலில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் போலீஸ் பன்னீர் வரவேற்றார். மதிவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன், தாமஸ்ஆல்வா எடிசன், சரவணன், செங்குட்டுவன், மாவட்ட பொறியாளர் அணி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க.வினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
 மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருவதால் ஏழை, எளிய பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
பெண்கள் ஒப்பாரி வைத்தனர்
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் காய்கறிகள் முதல் கட்டுமான பொருட்கள் வரை விலை  உயர்ந்து விட்டது. கடந்த ஒரு வாரத்தில் கியாஸ் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இருந்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடைக்கட்டி வைத்து தப்பு அடித்து ஊர்வலமாக அவுரித்திடலுக்கு கொண்டனர்.  பின்னர் தி.மு.க மகளிரணியை சோந்த பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்தனர்.முடிவில் நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகையில், பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாகையில், பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
2. நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.