திருட்டு வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவான வாலிபர் கைது


திருட்டு வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவான வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 10:20 PM IST (Updated: 22 Feb 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவான வாலிபர் சிக்கினார்.

கம்பம்:
கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதமூர்த்தி (வயது 56). இவரது வீட்டின் பூட்டை உடைத்து, கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி 9 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம நபர் திருடி சென்றார். 

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த அல்லாபிச்சை (34) என்பவரை தேடி வந்தனர். 

இந்நிலையில் அல்லாபிச்சை நாமக்கல்லில் இருப்பதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நாமக்கல் சென்று நேற்று அவரை கைது செய்தனர். 

அவர் மீது தேனி, கீரனூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story