உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல்
உளுந்துக்கு நியாயமான விலை வழங்கக்கோரி உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடை செய்த உளுந்துகளை விவசாயிகள் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வருகின்றனர். தினமும் ஏலம் போகும் விலைக்கே உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நேற்று உளுந்து விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதாகவும், மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறி விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story