குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவர்களை போலீசார் தடுத்து காப்பாற்றினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவர்களை போலீசார் தடுத்து காப்பாற்றினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் மனு கொடுப்பதற்காக ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் கே.கே. நகர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி ரெபேக்கா (வயது 29) என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் அங்கு வந்தார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் குறுக்கே பாய்ந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவரை தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்தனர்.
விசாரணை
இதுகுறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, தனது கணவர் காமராஜ் எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதாகவும், குடும்பத்தகராறு காரணமாக மாமனார் மற்றும் நாத்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்தி வருவதாகவும், அதனை தாங்க முடியாமல் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை கேணிக்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story