தலைவர்கள் படத்துடன் கூடிய டி சர்ட்டுகள் தயாரிப்பு மும்முரம்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிபிரமுகர்கள் படத்துடன் கூடிய டி சர்ட்டுகள் தயாரிப்பு திருப்பூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்களும் நிறுவனங்களுக்கு குவிந்து வருகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிபிரமுகர்கள் படத்துடன் கூடிய டி சர்ட்டுகள் தயாரிப்பு திருப்பூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்களும் நிறுவனங்களுக்கு குவிந்து வருகிறது.
விரைவில் சட்டமன்ற தேர்தல்
திருப்பூரில் ஏராளமான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பண்டிகை மற்றும் சீசன் கால அடிப்படையில் ஆடை தயாரிக்கப்படுகிறது. தற்போது கோடை கால ஆடை தயாரிப்பு திருப்பூரில் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கொடுக்கும் ஆர்டர்களின் படி இந்த கோடை கால ஆடைகள் தயார் செய்யப்படுகிறது.
இதுபோல் அவ்வப்போது வருகிற குறுகிய கால சீசன்களின்படியும் ஆடைகள் தயார் செய்யப்படுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்ட சீசன்களின் போது, அது தொடர்பான ஆடைகள் தயார் செய்யப்படும். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
டி சர்ட்டுகள் தயாரிப்பு மும்முரம்
இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தற்போது தமிழகத்தில் மும்முரமாக தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. என பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையே தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரசாரத்திற்கு அரசியல் கட்சிகள் வர தொடங்கியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் படத்துடன் கூடிய டிசர்ட்டுகள் திருப்பூரில் மும்முரமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
குவியும் ஆர்டர்கள்
இதுகுறித்து ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உருவப்படத்துடன் கூடிய டி சர்ட்டுகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்து வருகிறது. அதன்படி தயாரித்து அனுப்பி வருகிறோம்.
சென்னை, தேனி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் வருகிறது. இதுபோல் கட்சி கொடிகள், துண்டுகள் சால்வைகள் மற்றும் தொப்பிகள் போன்றவைகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த கட்சிகளின் ஆர்டர்கள்படி அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் மேலும் ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story