பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது
பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பீறிட்டு 20 அடி உயரத்திற்கு வெளியேறியது
பாலக்கோடு:
பாலக்கோட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பீறிட்டு 20 அடி உயரத்திற்கு வெளியேறியது
குழாயில் உடைப்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து குழாய்கள் மூலம் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப் படுகிறது.
இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாலக்கோடு பைபாஸ் 4 ரோடு பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது
சீரமைக்கும் பணி
இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறுபோல ஓடியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக குழாயில் குடிநீர் வருவது நிறுத்தப்பட்டது. இதைத். தொடர்ந்து அதிகாரிகள் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் குழி தோண்டி குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கோபுரம் போல மேலே பீறிட்டு வெளியேறியதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story