கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நேற்று உலக தாய்மொழிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் மணிமுத்து வரவேற்றார். அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் கற்பகம் சிறப்புரையாற்றினார். இதில் தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.