மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
சாத்தூர், பிப்.
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தையால் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 38) என்பவரை கைது செய்தனர். பெரியகொல்லபட்டி லிலக்கு அருகில் கண்ணன் (48) என்பவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டார்.
அதேபோல சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாத்தூர் அண்ணாநகர் கல்யாண மண்டபம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற படந்தாலை சேர்ந்த குணசேகர் (வயது 55) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story