மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + DMK protests against petrol, diesel and gas price hike

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க.வை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க.வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறக் கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை நிர்வாகிகளும், மகளிரணியினரும், தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய தலைவர்களும், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 1 லிட்டர் பெட்ரோல் பொதுமக்களுக்கு ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் தேர்தல் பரப்புரை பாடல் வெளியீடு செய்யப்பட்டு, பெரியார் சிலையில் இருந்து ரோவர் வளைவு வரை சைக்கிள் பயணம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -நிர்மலா சீதாராமன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு சிக்கலான பிரச்சினை, மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
5. இன்று மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து 92.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.