போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்


போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 23 Feb 2021 1:07 AM IST (Updated: 23 Feb 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம்
ரெயில்வே கேட்
கிருஷ்ணராயபுரம் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மாயனூர் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இருவழிச்சாலை வசதியுடன் கதவணை அமைந்துள்ளதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கரூர், முசிறி சென்று சுற்றி வர தேவையில்லை. கதவணை கடந்து சென்றால் பக்கத்து மாவட்டங்களுக்கு எளிதில் செல்லலாம். 
மேலும் ரெயில்வே கேட்டை கடந்து தான் கதவணை, அம்மா பூங்கா, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அதிக குடியிருப்புகள் உள்ளன. மேலும் தற்போது தென்கரை, கட்டளை மேட்டு வாய்க்கால் மீது பாலங்கள் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்தால் ஊருக்குள் செல்வதை தவிர்த்து ரெயில்வேகேட் கடந்து வந்து பாலத்தின் மீது சென்று வரலாம். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறாக மாயனூர் ரயில்வே கேட் விளங்கி வருகிறது. 
பொதுமக்கள் கோரிக்கை 
இந்த மார்க்கத்தின் வழியாக எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகிறது. ரயில் வரும் போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் இரண்டு பக்கமும் கார்,  வேன், லாரி, சைக்கிள் என வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதில்மற்றொரு பக்கம் போக்குவரத்து அணிவகுத்து நின்று கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் நெரிசலை ஏற்படுத்தி வருகிறது. 
எனவே மாயனூர் ரெயில்வே கேட் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story