மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி + "||" + The person who tried to cross the road was killed in a car collision

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
பாடாலூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருமச்சூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 40). இவருடைய மனைவி, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர் பகுதியில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று வரதராஜன் வந்தார். அவர், பாடாலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி
விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
2. தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
3. வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.
4. நைஜீரியாவில் சாலை விபத்து: 10 பேர் பலி
நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் வாகனங்கள் மோதி தீப்பிடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர்.