மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா + "||" + Corona for 7 newcomers in Cuddalore district

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 112 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 287 பேர் பலியான நிலையில், 24 ஆயிரத்து 760 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த கடலூரை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கடலூர், பண்ருட்டியை சேர்ந்தவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதுதவிர நேற்று 12 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில் 251 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை