முட்புதரில் கிடந்த அம்மன் வெண்கல சிலை


முட்புதரில் கிடந்த அம்மன் வெண்கல சிலை
x
தினத்தந்தி 22 Feb 2021 8:26 PM GMT (Updated: 22 Feb 2021 8:26 PM GMT)

முட்புதரில் கிடந்த அம்மன் வெண்கல சிலை

செக்கானூரணி
கொடிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடந்தது. அப்போது பிரவியம்பட்டி மயானத்தின் அருகே முட்புதரில் கிடந்த மீனாட்சியம்மன் வெண்கல சிலையை அதே ஊரைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கொடிக்குளம் கிராம நிர்வாக அதிகாரி ராமசாமி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் சிலையை மீட்டு வாலாந்தூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இந்த சிலை 2 அடி உயரத்தில் 4 கிலோ 400 கிராம் எடை கொண்டதாக இருந்தது. மேலும் சிலை சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் அதை சேதப்படுத்தியது யார், சிலை எப்படி முட்புதருக்கு வந்தது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story