மாவட்ட செய்திகள்

தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers tenkasi engaged in a waiting struggle.

தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தென்காசியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று  தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. 
போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் தேவி தலைமை தாங்கினார். முருகம்மாள், சண்முக லட்சுமி, திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை வட்ட கிளை தலைவர் தாயம்மாள் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஞானம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் ஆரிய முல்லை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை உள்பட பலர் பேசினார்கள். துரை சிங் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.