மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததோடு, தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் முத்துராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை தி.மு.க.வினர் எழுப்பினர். பெண் நிர்வாகி ஒருவர் கையில் விறகை பிடித்தப்படி கோஷம் எழுப்பினார்.
அறந்தாங்கி
இதேபோல் அறந்தாங்கி அண்ணா சிலை அருகே தி.மு.க.சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்-டீசல் உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணிகார்த்திகேயன், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் உதயசண்முகம் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
3. கயத்தாறில் பொக்லைன் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் பொக்லைன் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடந்தது
9-ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.
5. ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்