பட்டுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பட்டுக்கோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 2:23 AM IST (Updated: 23 Feb 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. பங்கேற்றார்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. பங்கேற்றார்.  
ஆர்ப்பாட்டம் 
பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகம் அருகே தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி கலந்துகொண்டு பேசுகையில்,  பா.ஜ.க. ஆட்சியில் எல்லா பொருட்களும் விலை உயர்ந்து விட்டன. தி.மு.க.வினர் மக்களிடம் விலைவாசி உயர்வை எடுத்து சொல்லி பிரசாரம் செய்யவேண்டும். இந்தநிலை மாற மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற வேண்டும். இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். 
சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை, மாநில மீனவர் அணி துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், மாநில சுற்றுச்சூழல் அணி இணைச்செயலாளர் வேலுசாமி, பாக்கியவதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், மதுக்கூர் இளங்கோ, பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் செல்லம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story