மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது + "||" + One person has been arrested in connection with the murder of an dmk administrator near nellai.

நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது

நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது
நெல்லை அருகே தி.மு.க. நிர்வாகி கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கூடல் போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.