தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேர்வு
தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேர்வு
மதுரை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி கோவையில் நடந்தது. இதில் மதுரை உள்ளிட்ட பலர் ஊர்களில் இருந்து நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் மதுரை வீரர் அப்துல்சலாம் 100 மீட்டர் ப்ரி ஸ்டைலில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் ப்ரிஸ்டைல், பேக் ஸ்ட்ரோக்கில் வெள்ளி என 3 பதக்கங்களை வென்றார். மற்றொரு வீரரான முகமதுஹாரூன் 100 மீட்டர் ப்ரி ஸ்டைலில் தங்கமும், 50 மீட்டர் ப்ரி ஸ்டைலில் வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்றார். போட்டியில் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை படைத்த மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் அப்துல்சாலம், முகமதுஹாரூன் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூருவில் மார்ச் மாதம் நடைபெறும் தேசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மதுரை வந்த வீரர்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின், விடுதி மேலாளர் ராஜா, பயிற்சியாளர் குமரேசன், மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
Related Tags :
Next Story