திம்பம் ரோட்டில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
திம்பம் ரோட்டில் ஒற்றை யானை திரிகிறது.
திம்பம் ரோட்டில் ஒற்றை யானை திரிகிறது.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது ஆசனூர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தாளவாடி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் மற்றும் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு லாரிகள் செல்கின்றன. அவ்வாறு செல்லும் லாரிகளில் இருந்து கரும்புகளை டிரைவர்கள் திம்பம் ரோட்டோரம் வீசி சென்றுவிடுகிறார்கள். இந்த கரும்புகளை காட்டு யானைகள் தின்று பழகிவிட்டன. இதனால் நாள்தோறும் திம்பம் ரோட்டோரம் யானைகள் வந்து செல்கின்றன.
வாகன ஓட்டிகள் அச்சம்
இந்த நிலையில் ஆண் யானை ஒன்று நேற்று திம்பம் ரோட்டோரம் வந்து அங்கு வீசப்பட்டு கிடந்த கரும்ைப தின்றது. பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றுவிட்டது. திம்பம் ரோட்டில் யானை சுற்றி திரிவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story