ஈரோடு மாவட்டத்தில் 214 ஆண்-பெண் போலீசார் திடீர் இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 214 ஆண்-பெண் போலீசாரை திடீர் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 214 ஆண்-பெண் போலீசாரை திடீர் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிரடி மாற்றங்கள்
ஈரோடு மாவட்ட காவல்துறையில் கடந்த சில நாட்களாக அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவில் நீண்ட காலம் பணியில் இருந்த பல போலீசார் விடுவிக்கப்பட்டு புதியவர்கள் தனிப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். சிலர் இடமாற்றமும் செய்யப்பட்டனர்.
214 பேர்
இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆண்-பெண் ஏட்டுகள் 214 பேர் நேற்று அதிரடியாக ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை நேற்று வெளியிட்டார்.
Related Tags :
Next Story