மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + teacher

ஈரோட்டில்பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில்பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பட்தாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோட்டில் பட்தாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
 பட்டதாரி ஆசிரியர் 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ஷாகிதா தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சுமதி, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான பணிமாறுதல் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் வேலைநிறுத்த காலத்தை முறைப்படுத்தி பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 
கோஷங்கள்
 தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கு ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பள்ளி கல்வித்துறையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாட்களாக உள்ளதை உடனே கைவிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அருள், மாவட்ட பொருளாளர் சிவராமன் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. "ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. 2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
2019ம் ஆண்டு போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
3. 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.
4. 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
5. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பூதலூர் வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.