கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் காயத்ரி ஹோமம்


கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் காயத்ரி ஹோமம்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:11 AM IST (Updated: 23 Feb 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் காயத்ரி ஹோமம்

அரிமளம்
அரிமளம் அருகே கோடகநல்லூர் சுந்தர சுவாமி அதிஷ்டானத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் காயத்ரி ஹோமம் கடந்த மாதம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றி சுந்தர சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் லிங்க வடிவிலான சுவாமிக்கு வெள்ளிக்கவசம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த ஒரு லட்சத்து 8 ஆயிரம் காயத்ரி ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story