மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி தற்கொலை + "||" + Suicide

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்
அன்னவாசல் அருகே கிளிக்குடி விளாம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 67). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு வேலை இல்லாததால் ஊருக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று பழனிச்சாமி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
2. வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
3. திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை
திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
இளையான்குடி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.