பெண் அதிகாரியிடம் தாலி சங்கிலி பறிப்பு


web photo
x
web photo
தினத்தந்தி 23 Feb 2021 3:28 AM IST (Updated: 23 Feb 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

பெண் அதிகாரியிடம் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

 துறையூர்
துறையூரில் உள்ள பாலகாட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கோகிலா (வயது 35). இவர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 21-ந் தேதி மாலை பணி முடிந்து பாலக்காட்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென கோகிலா கழுத்தில் அணிந்திருந்த  தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர். இதுகுறித்து துறையூர் போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் கோகிலாவிடம் தாலிச் சங்கிலியை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story