மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய லாரி டிரைவர் கைது + "||" + Truck driver arrested

மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

மணல் கடத்திய லாரி டிரைவர் கைது
மணல் கடத்திய லாரி டிரைவர் கைது
கல்லக்குடி
திருச்சி மாவட்டம், கல்லக்குடியை அடுத்த புள்ளம்பாடி-நத்தம் சாலையில் நேற்று அதிகாலை கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து  மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், லாரி டிரைவர் பாடாலூரை சேர்ந்த அங்கமுத்து மகன் மணிவேல் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை