மாவட்ட செய்திகள்

நெற்றியால் ஓடுகளை உடைக்கும்சாதனை நிகழ்ச்சி + "||" + Adventure show

நெற்றியால் ஓடுகளை உடைக்கும்சாதனை நிகழ்ச்சி

நெற்றியால் ஓடுகளை உடைக்கும்சாதனை நிகழ்ச்சி
நெற்றியால் ஓடுகளை உடைக்கும்சாதனை நிகழ்ச்சி
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலை ஊழியரான செல்வராஜ், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நெற்றியால் ஓடுகளை உடைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்காக திருவெறும்பூர் அருகே உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் சோழன் சாதனை புத்தகத்தை சேர்ந்தவர் மற்றும் பெல் நிறுவன அதிகாரிகள், பார்வையாளர்கள் முன்னிலையில் 52 வினாடியில் 192 ஓடுகளை தனது நெற்றியால் உடைத்து சாதனை படைத்தார். இதுவரை ஒரு நிமிடத்தில் 152 ஓடுகளை நெற்றியால் உடைக்கப்பட்டதே சாதனையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சாதனையானது, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக தெரிகிறது. அதற்காக செல்வராஜுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.