தலைவாசலில் நடந்த விழாவில் புதிய பொலிவுடன், சீரமைக்கப்பட்ட சேலம் அண்ணா பூங்கா திறப்பு
தலைவாசலில் நடந்த விழாவில் சேலத்தில் புதிய பொலிவுடன், சீரமைக்கப்பட்ட அண்ணா பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அண்ணா பூங்கா திறப்பு
சேலம் மாநகரில் பொதுமக்களுக்கு பொழுது போக்கும் இடமாக அண்ணா பூங்கா செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா பூங்கா மேம்படுத்தும் பணியும், ரூ.7 கோடியே 52 லட்சம் செலவில் கேளிக்கை காட்சியகங்களை மறுசீரமைப்பு செய்யும் பணியும் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் தலைவாசலில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அப்போது பணிகள் முடிவடைந்து விட்டதால் புதிய பொலிவுடன், சீரமைக்கப்பட்ட சேலம் அண்ணா பூங்காவையும் திறந்து வைத்தார்.
புதிய திட்டப்பணிகள்
மேலும் அவர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிழற்கூடைகள், ரூ.7 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேலம் விக்டோரியா காம்ப்ளக்ஸ் அருகில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் உள்பட மொத்தம் ரூ.77 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார்.
இதுதவிர ரூ.76 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினா
Related Tags :
Next Story