வாழப்பாடி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
தஞ்சாவூரில் இருந்து சேலம் நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் சென்றது. பஸ்சை அரியலூர் பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவர் ஓட்டி வந்தார்.
இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே பெரியகிருஷ்ணாபுரம் பகுதியில் பஸ் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையின் இடதுபுற பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு வாழப்பாடி மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story