மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + DMK workers protest in Salem against petrol and diesel price hike

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மத்திய, மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சேலம் தாதகாப்பட்டி கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இதற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கலையமுதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ பேசும் போது,‘இந்தியாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102 ஆக அதிகரித்து உள்ளது.

 விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும். விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் குரல் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, கட்சியின் மாநகர செயலாளர் ஜெயக்குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் இளந்திரையன், மெய்யனூர் பகுதி செயலாளர் சர்க்கரை சரவணன், நிர்வாகி எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. புதுடெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்பு
புதுடெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
3. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. தேனியில், விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேனியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நடந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
5. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது
வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரி, ஓசூரில் தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.