மாவட்ட செய்திகள்

கந்தம்பாளையம் அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி + "||" + lorry bike hit accident

கந்தம்பாளையம் அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி

கந்தம்பாளையம் அருகே லாரி- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி
கந்தம்பாளையம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
விவசாயி
கந்தம்பாளையம் அருகே உள்ள பிராந்தகம் பெரியபாளையம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் மேட்டுக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நல்லூர் போலீசார் பலியான நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அவருடைய மனைவி பார்வதி நல்லூர் போலீஸ் நிைலயத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கந்தம்பாளையம் அருகே பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு
கந்தம்பாளையம் அருகே பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கந்தம்பாளையம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.