பணி நிரந்தரம் செய்யக்கோரி கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல் + "||" + Strike by black-clad nutrition workers' union demanding permanent employment
பணி நிரந்தரம் செய்யக்கோரி கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியல்
பணிநிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் 210 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
பணிநிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் 210 பேரை போலீசார் கைது செய்தனர்.
காலி பணியிடங்கள்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை நிறைவேற்றக்கோரி நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் நடந்த போராட்டம் நடந்தது. இ்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து வந்த வண்ணம் இருந்தனர். போராட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் விஜயா தலைமை தாங்கினார்
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் கலந்து கொண்டவர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முதலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 170 பெண்கள் உள்பட சத்துணவு ஊழியர் சங்கத்தினரு் 210 பேரை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைந்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.