நாவை நாட்டியமாட செய்யும் பலாப்பழ சீசன் தொடங்கியது கிலோ ரூ.50 வரை விற்பனை
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை விரும்பாதோர் யாருமே இருக்கமுடியாது. நாவை நாட்டியமாட செய்யும் இதன் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தவகையில் அனைவருமே விரும்பக்கூடிய பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது.
சென்னை,
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை விரும்பாதோர் யாருமே இருக்கமுடியாது. நாவை நாட்டியமாட செய்யும் இதன் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தவகையில் அனைவருமே விரும்பக்கூடிய பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக குவிந்து உள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பலாப்பழங்களை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோயம்பேடு பழ வியாபாரிகள் சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-
பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாகும். இதையொட்டி பண்ருட்டி உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் பலாப்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகின்றன. அதேபோல மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story