தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்புவிழா


தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்புவிழா
x
தினத்தந்தி 23 Feb 2021 6:30 PM IST (Updated: 23 Feb 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் வடக்கு பஜார் முத்தாரம்மன் கோவிலுக்கு எதிர்புறம் மெயின் ரோட்டில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் வடக்கு பஜார் முத்தாரம்மன் கோவிலுக்கு எதிர்புறம் மெயின் ரோட்டில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார். அமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர் மோர் பந்தலை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தங்கமணி திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

Next Story