ஆடு திருடியவர் கைு


ஆடு திருடியவர் கைு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:49 PM IST (Updated: 23 Feb 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடியவர் கைது

மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சீர்காட்சியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 54). இவருக்கு சொந்தமான 2 ஆடுகளும் மற்றும் அதே ஊரைச்சேர்ந்த பால்தங்கம் என்பவருக்கு சொந்தமான ஆடும் சீர்காட்சி சங்கடகர சுவாமி கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது தூத்துக்குடி தாளமுத்து நகர் சேது நகர் 3-வது தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் முனியசாமி (39), முத்தையாபுரம் வீரநாயக்கன் தெருவை சேர்ந்த செந்தில்குமார், அதே ஊரைச்சேர்ந்த சக்திவேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ஆடுகளை கடத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த ஜவகர் விரட்டிய போது முனியசாமி பிடிபட்டார். அவரை ஜவகர் பிடித்து மெஞ்ஞானபுரம் போலீசில் ஒப்படைத்தார். மற்ற 2 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Next Story