மாவட்ட செய்திகள்

சிறுத்தைப்புலி நடமாட்டம் + "||" + Leopard migration

சிறுத்தைப்புலி நடமாட்டம்

சிறுத்தைப்புலி நடமாட்டம்
வாணியம்பாடியில் சிறுத்தைப்புலி நடமாடுவதாக கூறிய இடத்தில் வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் தண்டோரா போட்டு இரவில் வெளியே செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வாணியம்பாடி

வாணியம்பாடியில் சிறுத்தைப்புலி நடமாடுவதாக கூறிய இடத்தில் வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் தண்டோரா போட்டு இரவில் வெளியே செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

சிறுத்தைப்புலி நடமாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரை ஒட்டியுள்ள சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இன்று பிற்பகல் 1 மணியளவில் சிறுத்தைப்புலி நடமாடுவதை அங்கிருந்த மக்கள் பார்த்தனர். 

தகவல் அறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் ஆலங்காயம், திருப்பத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். 

பின்னர் அங்குள்ள தென்னந்தோப்பில் காவலுக்கு இருந்த சம்பூர்ணம் மற்றும் மல்லிகா என்ற பெண்களிடம் விசாரணை நடத்தினர். 

வெளியில் சுற்றி திரிய வேண்டாம்

இதனையடுத்து வாணியம்பாடி நகர பகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் அஞ்சமடையாமல் தைரியமாக இருக்க வேண்டும் எனவும், சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் வெளியில் யாரும் சுற்றி திரிய வேண்டாம் எனவும் தண்டோரா மூலம் காவல் துறையினரும், வனத்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த பகுதியை ஒட்டியுள்ள சங்கராபுரம் பகுதியில் இதேபோல் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்தது, அதனை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

 மீண்டும் இதே பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடுவது கண்டறியப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.