மாவட்ட செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா + "||" + DMK MLA to Corona

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆம்பூர்

ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

தி.மு.க. எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அ.செ.வில்வநாதன் (வயது 61).

இவரது வீடு ஆம்பூர் அருேக மிட்டாளம் கிராமத்தில் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

அதன் முடிவில் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் வில்வநாதன் எம்.எல்.ஏ. வீடு மற்றும் கிராம பகுதி முழுவதும் சுகாதார தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.